அமைச்சரின் 1.50 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டு!! பரபரக்கும் காவல்துறை!!1051562725
அமைச்சரின் 1.50 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டு!! பரபரக்கும் காவல்துறை!! கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜயவசந்த். இவர் முன்னாள் எம்பி வசந்தகுமார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தையின் தொகுதியிலேயே வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றவர். இவர் கிண்டி தனியார் உணவகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய பேனா காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த பேனாவின் விலை ரூ.1.50 லட்சம் மதிப்புடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரிடமே பேனா காணாமல் போனால் நாட்டு மக்களின் நிலை என்ன ? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.