Posts

Showing posts with the label #Political | #Parties | #Attending | #Governor

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காத அரசியல் கட்சிகள்.!

Image
ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காத அரசியல் கட்சிகள்.! சித்திரை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், நாளை தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த விருந்தை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிகைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணை வேந்தர் நியமன பிரச்சனை, இந்தியா