Posts

Showing posts with the label #Finale | #Lsquo | #Scorched | #Forest

‘வெந்து தணிந்தது காடு’ இறுதிகட்டதில்

Image
‘வெந்து தணிந்தது காடு’ இறுதிகட்டதில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத் தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.