இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் இன்று அனுப்பிவைப்பு
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் இன்று அனுப்பிவைப்பு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு உதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் இலங்கை செல்கிறது. இதனை சென்னை துறைமுகத்தில் நிவாரண பொருட்கள் கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.