பள்ளி, கல்லூரிகளில் 10,371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு954918262
பள்ளி, கல்லூரிகளில் 10,371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு சென்னை: நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிகளில் நிரப்ப வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அவற்றுக்கான போட்டித் தேர்வுகள் நடக்கும் தேதி, ஆகியவை குறித்த திருத்திய திட்டப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி 10,371 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறையில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான பணியில் ஆசிரியர் தேர்வுவாரியம் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து லட்சக் கணக்கான ஆசிரியர்கள் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையைப் போல அரசு கல...