மண்டபத்தில் கோர விபத்து “தலை நசுங்கி.. கொடூரமாக” பலியான மாணவன்!
மண்டபத்தில் கோர விபத்து “தலை நசுங்கி.. கொடூரமாக” பலியான மாணவன்! ஜெயக்குமாரின் மகள் மண்டபம் திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா மற்றும் மருமகன் நவீனுக்கு சொந்தமாக மீன் வலை உற்பத்தி தொழிற்சாலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் ஜெயக்குமாரின் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்து ஆண்டு திறந்து வைத்தார். மண்டபத்தில் விபத்து இந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்துள்ளது. இந்த நிகழ்வில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சீத்தல், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் 23, விக்னேஷ் 21 ஆகியோர் லிஃப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவை கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் லிஃப்ட்டின் இரும்பு ரோப் அறுந்து விழுந்தது. மாணவன் பலி இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவன் சீத்தல் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். லி...