இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு: 2 விசைப்படகுகளும் பறிமுதல்



ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு பகுதிக்கு செல்ல முயன்றனர். தொடர்ந்து விடாமல் விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் அந்தோணி லிவிங்ஸ்டன்(30), மெஜோ(40), மரியடேனிஸ்டன்(26), சியோன்(25), ராபர்ட் கிளைவ்(42), நிலன்(30), பிரான்சிஸ்(22), சந்தியா(25), கெல்மன்ராஜ்(27), சகாயசுபாஷ், ஜெபமாலை(23) மற்றும் கிளிஸ்டன்(25) ஆகிய 12 பேரை சிறை பிடித்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog