ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினிக்கு 4வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி , தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்.இதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து 3 முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள நளினி, தினமும் காட்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
Also read... "கார்பரேட் நிறுவனம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment