மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!993645191


மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!


உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு உக்ரைன் - ரஷியா போர், பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகள், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தங்கத்தின் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அட்சய திருதியை தினத்தில் 2 நாட்களுக்கு தங்கத்தின் விலை சரிவுடன் காணப்பட்டது.

 

அதன்பிறகு மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின்  விலை பெருமளவுறு குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராமுக்கு ரூ40 ம், சவரனுக்கு ரூ.320 ம் குறைந்திருப்பது முதலீட்டாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை குறைப்பின் படி ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.38,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

ஒரு கிராம் தங்கத்தின் விலை  ரூ.4,765க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் சுப காரியங்கள் அநேகம் நடைபெறும் மாதம்.  முகூர்த்த மாதமாக திகழும் வைகாசி மாதம் தங்கம் ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog