சினிமாவை விட்டு விலக போகிறேன்.?: நடிகர் சித்தார்த் திடீர் முடிவு.!


சினிமாவை விட்டு விலக போகிறேன்.?: நடிகர் சித்தார்த் திடீர் முடிவு.!


சங்கரின் பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்சித்தார்த், சமூக பிரச்சனைகள் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை துணிச்சலாக பகிர்ந்து வருகிறார்.

நடிகர் சித்தார்த் பெரும்பாலும் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்த கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர். அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு சித்தார்த் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த பலரும் சித்தார்த்தை குறித்து அவதூறாக பல கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அதனை தொடர்ந்து தனக்கு வந்த மிரட்டல்கள் குறித்தும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் குறித்து சித்தார்த் விமர்சனம் செய்து அண்மையில் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் தற்போது மகாசமுத்திரம், சைத்தான் கே பச்சா, டக்கர் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீரியல் நடிகை தற்கொலை விவகாரம்: காதலரிடம் தீவிர விசாரணை.!

Comments

Popular posts from this blog