நெஞ்சுக்கு நீதி படத்தோட பேர சொன்னதும்..ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?..


நெஞ்சுக்கு நீதி படத்தோட பேர சொன்னதும்..ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?..


நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜய் குருவி மற்றும் சூர்யா நடித்த ஆதவன் படங்களை தயாரித்தவர் ஒரு கல் ஒரு கண்ணாடியில் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

Nenjuku Needhi 02

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி பகம் மே 20 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆட்டின் படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Nenjuku Needhi 2

இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வினியோகம் மற்றும் அரசியல் என பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது சேனலுக்கு பிரத்யேகமாக சேனல் ஒன்றில் மூலமாக வழங்கியுள்ளார். அதில் தான் நடிக்கும் நெஞ்சுக்கு நீதியும், அண்ணன் அரசியல் வாழ்க்கை தொடர்ந்து பல படங்களை வாங்கி வெளியிடுவது குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Nenjuku Needhi 1

நெஞ்சுக்கு நீதி என்ற தனது தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் பெயரை தனது படத்திற்கு வைத்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தான் இந்த பெயரை முதலில் பரிந்துரைத்தார் அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியானேன். ஆனால் அவர் இந்த படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வைக்க முடியாது எனக் கூறினார். ஆனால் நான் என் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரிடம் இதுபற்றி கேட்டுவிட்டு தான் சொல்வேன் எனக் கூறினேன். இதுபற்றி என் அப்பாவிடம் சொன்னபோது அவர் என்ன படம் எதுவும் தப்பா எடுத்து விடாதீர்கள் என கூறினார். நான் அவரிடம் இல்லப்பா நல்ல படம் தான் தேசிய விருது வாங்கின படம் என்று கூறியதும் ஒத்துக் கொண்டார் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Related Topics:, , ,

Click to comment

Comments

Popular posts from this blog