சித்ரா கிட்ட அதை பண்ண சொன்னேன் அவ கேட்கல.. அவ தற்கொலை பண்ணிக்கல கொலை தான்.. ரேகா நாயர் பகீர்!


சித்ரா கிட்ட அதை பண்ண சொன்னேன் அவ கேட்கல.. அவ தற்கொலை பண்ணிக்கல கொலை தான்.. ரேகா நாயர் பகீர்!


கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி விஜே சித்ரா தூக்கிட்ட நிலையில், போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில், சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடன் நடித்த பலரும் சந்தேகத்தை கிளப்பினர். சம்பவம் நடந்த அன்று நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் சித்ரா மற்றும் ஹேமந்த் தனியாக ரூம் எடுத்து தங்கி இருந்தனர்.

சித்ராவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரேகா நாயருக்கும் ஹேமந்துக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார் ரேகா நாயர். சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜே சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது மரணம் கொலை தான் என அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தினார் ரேகா நாயர். ஆனால், விஜே சித்ராவை ஹேமந்த் கொலை செய்யவில்லை என்றும் உறுதியாக கூறுகிறார். மேலும், சித்ராவை யார் கொலை செய்தது என்பது ஹேமந்துக்கு நல்லாவே தெரியும் என்றும் மாஜி அமைச்சருக்கு இதில் தொடர்பில்லை என்றும் பேசியுள்ளார்.

பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை கழட்டி விடுவது தான் ஹேமந்தின் வேலை என்றும் அவனை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுடு என சொன்னேன். ஆனால், அவள் கேட்கவில்லை. அவசர அவசரமா ரெஜிஸ்டர் மேரேஜ்லாம் பண்ணிட்டு கடைசியில இப்படி ஆகிடுச்சு என்றார்.

வாரத்தில் பல நாட்கள் பார்ட்டி பப் என்று தான் விஜே சித்ராவும் ஹேமந்தும் சுற்றி வந்தனர். அவளுக்கு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் நடிகர்களுடன் தொடர்பு இருந்தது உண்மை தான். மேலும், ஹேமந்த் விஜே சித்ராவை பல வகையில் யூஸ் செய்து விட்டு இப்படியொரு நிலைக்கு தள்ளி விட்டான் என கடுமையாகவே சீறியுள்ளார் ரேகா நாயர். விஜே சித்ரா மரணத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய ஆதாரங்கள் ரேகா நாயரிடம் வலுவாக இருப்பதால் தான் அவர் தொடர்ந்து இந்த பிரச்சனையில் தலையிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog