Dhaakad:நயன்தாராவை அடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சர்ச்சை நடிகை


Dhaakad:நயன்தாராவை அடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சர்ச்சை நடிகை


தான் நடித்திருக்கும் தாக்கத் படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார் கங்கனா.

கங்கனா

ஹீரோயினை மையமாக கொண்ட தாக்கத் படத்தில் நடித்திருக்கிறார் கங்கனா. அந்த படம் மே 20ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாவிருக்கிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் கங்கனா. தன் படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்திருக்கிறார்.

இல்லையே

அனைத்து இந்தி திரைப்பட கலைஞர்களும் சக கலைஞர்களை ஆதரிப்பதாக நடிகர் அஜய் தேவ்கன் கூறியது பற்றி கங்கனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, அஜய் தேவ்கன் என் படத்தை நிச்சயம் விளம்பரம் செய்ய மாட்டார். மற்றவர்களின் படத்தை வேண்டுமானால் விளம்பரம் செய்வார். அக்ஷய் குமார் எனக்கு போன் செய்து தலைவி படம் பிடித்திருப்பதாக கூறினார். ஆனால் என் ட்ரரெய்லரை ட்வீட் செய்ய மாட்டார் என்றார்.

திருப்பதி

பட்டுச் சேலை அணிந்து அவ்வளவாக மேக்கப் இல்லாமல் கங்கனா வந்திருந்தார். அவருடன் தாக்கத் பட தயாரிப்பாளர் தீபக் முகுத் வந்திருந்தார். தாக்கத் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் என் பட ட்ரெய்லரை ட்வீட் செய்து உடனே நீக்கிவிட்டார். அது ஏன் என்று என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் அது ஏன் என எனக்கு தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தாக்கத் படத்தில் அர்ஜுன் ராம்பல், திவ்யா தத்தா, சாஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog