ஸ்ரீபெரும்புதூரில் 29 மாணவர்களுக்கு கொரோனா!!1692794732


ஸ்ரீபெரும்புதூரில் 29 மாணவர்களுக்கு கொரோனா!!


ஸ்ரீபெரும்புதூரில் 29 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 17 ஆயிரத்து  365 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்காத நிலையில்  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 927 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருந்தது.குறிப்பாக கல்வி நிறுவனங்களில் கடந்தவாரங்களாக கொரோனா தொற்று  கண்டறியப்பட்டு வந்தது . சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் என மாணவர்கள் தொற்றால்  பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். 

 

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog