தேசிய கொடி டிபி.. பிரதமர் மோடி கோரிக்கை! டெல்லி: இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சமூக வலைதள கணக்குகளில் புரொபைல் படமாக வைக்க பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை ஏற்பதாக திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது. கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மன் கி பாத் இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மன் கி பாத் வானொலி உரையில் நாட்டு...