கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!1845121711
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி விவரங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் கொடுக்கும் போது உங்களது வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு மொத்த பணத்தையும் திருடிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் இன்-ஆப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தனித்துவமான டோக்கன்களால் மாற்றப்பட வேண்டும் என RBI அறிவித்துள்ளது.
இந்த டோக்கன் மூலமாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகள் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் மூலமாக வாடிக்கையாளர் விவரங்களை வெளியிடாமல் பணத்தை செலுத்த முடியும்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு இந்த டோக்கன் முறை வசதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியில் இருந்தும் வாடிக்கையாளர் தப்பித்துக்கொள்ள இது சிறந்த முறையாக இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
Comments
Post a Comment