வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! பிப்ரவரி மாத வங்கிகள் விடுமுறை பட்டியல் வெளியீடு !!


வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! பிப்ரவரி மாத வங்கிகள் விடுமுறை பட்டியல் வெளியீடு !!


ஜனவரி முடிய இன்னும் சில தினங்களே உள்ளன. அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி  சாமானியர் வரை பிப்ரவரி மாதத்தின் பணிகளை இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டனர். இந்தியா முழுவதும் பணப்பரிவர்த்தனைகள் படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.  வங்கிகள் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வாழ்வாதாரமாகவே மாறத் தொடங்கிவிட்டது.

 

நமது பணிகளை திட்டமிடவும், பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்தவும் வங்கி செயல்படும் நாட்கள் அவசியமாகிறது.  இந்தியா முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு வங்கிகள் பணிபுரியும் நாட்கள் , விடுமுறை தினங்களை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்குரிய விடுமுறை நாட்களை தற்போது அறிவித்துள்ளது.  பணப்பரிவர்த்தனை சேவைகளை வீட்டிலிருந்தபடியே 24 மணி நேரமும் ஆன்லைனிலேயே பண்ணிவிடலாம் என்றபோதிலும் அத்தியாவசிய மற்றும் உடனடி தேவைகளுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டியது கட்டாயம்.  


அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் :

பிப்ரவரி 5 - ஞாயிற்றுக்கிழமை 
பிப்ரவரி 11- 2ம் சனிக்கிழமை 
பிப்ரவரி 12 - ஞாயிற்றுக்கிழமை 
பிப்ரவரி 18 - மகா சிவராத்திரி குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்  விடுமுறை
பிப்ரவரி 19 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 20 - மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம்  மாநிலங்களில் விடுமுறை)
பிப்ரவரி 21 - லூசார் (சிக்கிமில் விடுமுறை)
பிப்ரவரி 25 - 4 வது சனிக்கிழமை 
பிப்ரவரி 26 - ஞாயிற்றுக்கிழமை 
இதன் அடிப்படையில் வங்கிப்பணிகளை திட்டமிட்டு  கடைசிநேர பரபரப்பை தவிர்த்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog