அதிகாலையில் கோர விபத்து! கார் மீது அரசு பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு!95477289


அதிகாலையில் கோர விபத்து! கார் மீது அரசு பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு!


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலையில், அரசு பேருந்து ஒன்று கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளார்.

 

அதிவேகத்தில் அரசு பேருந்து கார் மீது மோதியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி  கவிழ்ந்தது.

 

காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Comments

Popular posts from this blog