Posts

மண்டபத்தில் கோர விபத்து “தலை நசுங்கி.. கொடூரமாக” பலியான மாணவன்!

Image
மண்டபத்தில் கோர விபத்து “தலை நசுங்கி.. கொடூரமாக” பலியான மாணவன்! ஜெயக்குமாரின் மகள் மண்டபம் திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா மற்றும் மருமகன் நவீனுக்கு சொந்தமாக மீன் வலை உற்பத்தி தொழிற்சாலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் ஜெயக்குமாரின் மகளுக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்து ஆண்டு திறந்து வைத்தார். மண்டபத்தில் விபத்து இந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்துள்ளது. இந்த நிகழ்வில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சீத்தல், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் 23, விக்னேஷ் 21 ஆகியோர் லிஃப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவை கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் லிஃப்ட்டின் இரும்பு ரோப் அறுந்து விழுந்தது. மாணவன் பலி இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவன் சீத்தல் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். லி

நன்னடத்தை பிணையை மீறிய 3 பேருக்கு சிறை தண்டனை

Image
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் பல்லவர் மேடு கோபி (எ) கோழி கோபி (33), தாயார் குளம் ஹரிபாபு (24) ஆகியோரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களது கோரிக்கையை ஏற்று, 2 பேரும் ஓராண்டு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் ஆர்டிஓ ஆணை பிறப்பித்தார். இந்தவேளையில், கோபி, ஹரிபாபு ஆகியோர் நன்னடத்தை பிணையை மீறி ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகே டாஸ்மார்க் கடை ஊழியர் ராயக்கோட்டையை சேர்ந்த ராஜன் (36) என்பவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை மீண்டும் கைது செய்தனர். இந்நிலையில், நன்னடத்தை பிணையை மீறியதற்காக கோபியை 69 நாட்களும், ஹரிபாபுவை 220 நாட்களும் சிறையில் அடைக்க ஆர்டிஓ... விரிவாக படிக்க >>

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதிலிருந்து பின்வாங்குகிறாரா எலான் மஸ்க்?

Image
ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் சிஇஓவான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்து ஒப்பந்தம் மேற்கொண்டார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழு பங்கை வாங்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ட்விட்டரில் கருத்து சுதந்திரத்தை நிலைநிறுத்துவதே பிரதான நோக்கம் என மஸ்க் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் போலி மற்றும் ஸ்பேம் கருத்துகளை பரப்பும் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் ஊடகம் தனது கட்டுரையில்... விரிவாக படிக்க >>

டான் திரைவிமர்சனம்.! சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா !! DON Movie Review

Image
டான் திரைவிமர்சனம்.! சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா !! DON Movie Review   சிவகார்த்திகேயன் படத்தில் சிறு வயதிலிருந்தே பெரிதாக படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார். அவர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆசையையும் கனவையும் மாற்றிக் கொள்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் அப்பாவோ படித்தால் தான் வாழ்க்கை படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என கண்டிப்புடன் பேசுகிறார் அதனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய அப்பா மீது வருத்தம் கொள்கிறார்......

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு; சமரச திட்டம் அறிவித்தார் கோத்தபய; முக்கிய எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு: மக்கள் போராட்டம் தொடர்கிறது

Image
கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அதிபர் கோத்தபயாவின் சமரச திட்டத்தின்படி நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அதிபர் அதிகாரத்தை குறைக்க 19வது சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் கோத்தபய அறிவித்துள்ளார். இருப்பினும், கோத்தபய பதவி விலக கோரி போராட்டம் தொடர்வதால், இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, பசி பட்டினி கொடுமை  உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக கொழும்பு மற்றும் காலிமுகத்... விரிவாக படிக்க >>

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று - அதிபர் கிம் எடுத்த அதிரடி முடிவு | Corona Virus | North Korea

Image
வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று - அதிபர் கிம் எடுத்த அதிரடி முடிவு | Corona Virus | North Korea

நெஞ்சுக்கு நீதி படத்தோட பேர சொன்னதும்..ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?..

Image
நெஞ்சுக்கு நீதி படத்தோட பேர சொன்னதும்..ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?.. நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜய் குருவி மற்றும் சூர்யா நடித்த ஆதவன் படங்களை தயாரித்தவர் ஒரு கல் ஒரு கண்ணாடியில் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி பகம் மே 20 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆட்டின் படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வின